பூமி முதல் விண்வெளி வரை..
Description:... சூரியனிலிருந்து மூன்றாவது கோள் பூமி.சூரியமண்டலத் தில் உள்ள எட்டுக் கோள்களில் ஐந்தாவது பெரிய கோள். எட்டுக் கோள்களில் நான்குதான் திடக்கோள்கள். இந்த நான்கு கோள்களில் பூமிதான் மிகப்பெரியது. மிக அடர்த்தியானது. பூமியை உலகம் என்றும் ஊதா கோள் என்றும் டெர்ரா என்றும் அழைக்கிறார்கள்.
பூமியில் மனிதர்கள் உள்பட கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிரினம் வாழும் கோள் ஆகும். பூமி 454 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. ஆனால், இங்கும் உயிரினம் தோன்றி நூறு கோடி ஆண்டுகளே ஆகின்றன.
பூமியில் அடுத்த 150 கோடி ஆண்டுகளுக்கு உயிரினம் வாழமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விண்வெளி எல்லையற்றது. முக்கோண வடிவில் விரிந்து பரந்துள்ள விண்வெளியில் ஏராளமான பால்வீதிகளும், நட்சத்திர மண்டலங்களும் அமைந்துள்ளன.
விண்வெளி சம்பந்தமாக தத்துவார்த்தமான பல கேள்விகள் 17 ஆம் நூற்றாண்டில்தான் எழுந்தன. விண்வெளி தட்டையாக இருப்பதாக சிலர் கூறினார்கள். பின்னர் வந்தவர்கள் ஆராய்ந்து விண்வெளி வளைந்து இருப்பதாக கூறினார்கள். தொலை நோக்கி கருவிகளின் வளர்ச்சி இன்றைக்கு கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களையும் லட்சக்கணக்கான பால்வீதிகளையும் கண்டுபிடிக்க காரணமாகி இருக்கின்றன.
பூமியைப் பற்றியும் விண்வெளியைப் பற்றியும் பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூல் எளிமையான விடை அளிக்கிறது.
Show description